book

காந்தி - கோட்சே

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவாரூர் அர. திருவிடம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348472489
Add to Cart

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேசப்பிதாவாகப் போற்றப்படுபவர். காந்தி ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவர். சத்தியாக்கிரகம் என்ற அகிம்சை எதிர்ப்புக் கருத்தை அறிமுகப்படுத்திய காந்தியைச் சுட்டுக்கொன்றவர் கோட்சே. இந்தக் கொலை நடப்பதற்குப் பின்னணியாக அமைந்த அக்காலகட்ட சூழலையும், கொலை நிகழ்வையும், கோட்சேவின் மரணத்தையும் விளக்குவதே காந்தி-கோட்சே என்னும் இந்நூல்.
1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெளியே வந்தபோது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றார். 38 வயதான அவர் ஒரு வலதுசாரி கட்சியான இந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானின் மீது மென்மையாகவும் நடந்து கொண்டதன் மூலம் காந்தி இந்துக்களுக்குத் துரோகம் இழைத்ததாக இந்து மகாசபை குற்றம்சாட்டியது. 1947இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்ட பிரிவினைக்காக, ஏற்பட்ட உயிர்ச் சேதங்களுக்கும் காந்தியே காரணம் என்று அந்த கட்சியினர் குற்றம்சாட்டினார்கள். இத்தகைய காரணங்களுக்காக காந்தியைக் கொலை செய்ய முனைந்ததை இந்த நூல் விரிவாக விளக்கியுள்ளது.