book

மேல் கோட்டை

₹650
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :958
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கெனவே கருதி முடிந்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் உணர்ந்தனர். இங்ஙனம் திட்டமே மாறிப் போகும்படியாக ஒற்றர்கள் கூறிய செய்திதான் என்ன? “ஆருணி, கோட்டை மதில்களையும் அரணிலுள்ள மற்ற உறுப்புக்களையும் பழுது நேர்ந்த இடங்களிற் செப்பனிட்டுள்ளான். இரவிலும் பகலிலும் கோட்டைப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை முன்னிருந்ததைக் காட்டிலும் மிகுதிப்படுத்தியிருக்கிறான். மதில்களின் விளிம்பிலமைந்த ஆளோடிகள் சிதைந்து போயிருந்த பகுதிகளில், அவற்றை மீண்டும் புதிதாகக் கட்டச் செய்திருக்கிறான். கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியை அது முன்பிருந்ததைக் காட்டிலும் பயங்கரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறான். கற்களைப் பதித்து ஆற்றுக்கும் அகழிக்கும் ஒரு சுரங்கக் கால்வாய் மூலமாக இணைப்புச் செய்திருப்பதனால், அகழியில் ஆள் இறங்க முடியாதபடி நீரின் ஆழம் மிகுந்திருக்கிறது. கோட்டையைச் சேர்ந்தவர்கள் அகழியில் தோணிகளை மிதக்க விட்டுக்கொண்டு ஓரத்து மதிற் சுவர்களில் ஏற முடியாதபடி பல இயந்திரப் பொறிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடக்க முடியாத அகழியை எவ்வாறேனும் கடந்து சென்றுவிட்டால், மதிற் சுவர்களை நெருங்கவும் இயலாதவண்ணம் நுணுக்கமான விசைப் பொறிகள் பல பொருத்தப்பட்டு இருக்கின்றன. முற்றத்துறந்த முனிவர்களே வந்தாலும் சரி, அவர்களை நன்றாக ஆராய்ந்து தெளிந்து ஐயந்தீர்ந்த பின்புதான் கோட்டை வாயிலுக்குள் நுழைய விடுகின்றார்கள். நாட்டில் அங்கங்கே இருந்த படைத்தலைவர்கள் யாவரும் அரசன் ஏவலால், கோட்டைக்குள்ளே இருந்தவர்களில் தனக்குப் பயன்படாத சாதாரண மக்களை எல்லாம் வெளியே காடுகளின் புறத்தே சென்று வசிக்குமாறு துரத்திவிட்டான் ஆருணி, ‘எங்கள் பழைய மன்னன் உதயணன்தான் எங்களை ஆளவேண்டும்’ என்று எவரெவர் ஆர்வத்தோடு கலகம் செய்தார்களோ, அவர்களை யெல்லாம் சிறையில் அடைத்து விட்டனர். இன்னும் சில முக்கியமான செய்திகள்: ‘உதயணன் படையெடுத்து வருவான்’ என்பதை ஆருணி எவ்வகையிலோ முன்பே அறிந்து கொண்டிருக்கிறான். ‘உன் மகளை வலிய தூக்கிச்சென்று மணந்துகொண்ட உதயணனைப் பழிவாங்க ஒரு நல்ல வாய்ப்பு! அந்த உதயணன் என்னுடன் போருக்கு வருகிறான்