book

பராந்தகன் கனவு

₹760
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :724
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

சூனியமான அந்த மகேந்திரமண்டபத்தைப் பொன்னன் புறமும் பலமுறை சுற்றிச்சுற்றித்தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப்போயிருப்பார் என்று சிந்தனை செய்தான் . நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்து முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத்தொடங்கினார்கள் . தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். இளவரசருக்கு ஜூரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப்போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது பகீர் என்றது, அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உரறுவான் . பிறகு வெளியிலே வந்து , உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான். மறுபடியும் திரும்பி வருவான் இதுதான் இந்த் புத்தகத்தின் கதை.