book

மகாராஜாவின் பயணங்கள்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்களூர் இரவி, ஜகத்ஜித் சிங்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390958788
Add to Cart

சீனா, ஜப்பான், ஜாவா என்று உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்த ஒரு மகாராஜாவின் இதயத்தை அள்ளும் பயண அனுபவங்கள். ஒரு மகாராஜாவின் கண்களைக் கொண்டு உலகைப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பயண நூல்களுக்கு எப்போதும் சிறப்பிடம் கொடுக்கப்படுவது வழக்கம். கிரேக்கப் பயணிகளும் சீனப் பயணிகளும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால் பண்டைய இந்தியாவை நம்மால் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா? இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கிருந்து பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் தங்கள் அனுபவங்களை அவ்வாறு எழுதி வைத்திருக் கிறார்களா என்று பார்த்தால் பெருமளவு வருத்தமே மிஞ்சுகிறது. அந்த வருத்தத்தை ஈடுசெய்யும் வகையில் ஒரு மகாராஜா மிகவும் சுவையான, மிகுந்த பயனளிக்கும் பயணக் குறிப்புகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். பிரிட்டிஷ் காலத்தில் கபுர்தலா எனும் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜாவாக இருந்த ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர்தான் அவர். மூன்று முறை உலகை வலம் வந்த இந்த மகாராஜா சீனா, ஜப்பான், ஜாவா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து எழுதிய பயண நூல் முதல் முறையாகத் தமிழாக்கம் பெறுகிறது. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் அட்டகாசமான நடையில் எழுதியிருக்கிறார் ஜகத்ஜித் சிங். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்நாடுகள் எப்படி இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு. அக்களூர் இரவியின் அழகிய மொழியாக்கத்தில் ஒரு வண்ணமயமான உலகம் நம்முன் விரிகிறது.