ஆபுத்திரன்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :375
பதிப்பு :1
Published on :2016
Add to Cartவாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். பெரியவன் ஆன ஆபுத்திரன் அவ்வூர் அந்தணன் தன் இல்லத்தில் செய்த வேள்வி ஒன்றில் பலியிட இருந்த பசு ஒன்றைக் காப்பாற்ற இரவோடு இரவாக அதனைக் கவர்ந்து சென்றான். அதனைக் கண்டுகொண்ட மறைகாப்பாளர் முரடர்களுடன் சென்று வழியில் மடக்கி, அடித்து “நீ அந்தணன் இல்லை. புலைமகன்” என்று திட்டி. அவனிடமிருந்த பசுவைக் கைப்பற்றிக்கொண்டனர். அப் பசு தன்னைக் கைப்பற்றிய அந்தணர் உவாத்தியைக் (ஆசிரியர் தலைவனைக்) கொம்பால் குத்தித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது..ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறினான். பசும்புல் மேய்ந்து பால் தரும் பசு செய்த கொடுமை என்ன என வினவினான். “நீ ஆ புத்திரன் தானே! திருமால் தந்த மறைநூல் அறியாதவன்” எனச் சொல்லி ஆபுத்திரனை இகழ்ந்தனர்.