
மலராத மொட்டுகள்
₹500
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :430
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஇந்த நாவல் 70களில் எழுதப்பட்டு 80களில் முதல் முதலாக வெளிவந்தது. என் முதல்நாவல் இது.
எனவே இதைப் படிக்கும் அன்பர்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நினைவுகளை நிறுத்தில் படிக்க வேண்டும். இந்த நாவலின் இருபத்து நான்காம் அத்தியாயத்தில் ஒரு தலைப்பு தரப்பட்டிருக்கிறது.
எண்ணத்தால் தூய்மையானதொரு காரியத்தைச் சமுதாயமும் சம்பிரதாயமும் இடம் கொடுக்க வில்லை என்று செய்யாமல் விட்டு விடுவதை விட அதைச் செய்து அவற்றில் ஓர் இடத்தை ஏற்படுத்தி விடுவது சாமர்த்தியம் மட்டுமல்ல, இன்று தேவையானதும் கூட.
இது தான் இந்த நாவலின் கரு எனலாம்.
இக் கருத்து 40 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டதால் இருந்தாலும் இப்போதும் பொருந்தக் கூடியத தான் இன்னும் சொல்லப் போனால் இக்காலகட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் சொல்லலாம்.இது சமுதாய சீர்த்திருத்த மல்ல. மனித வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும் அம்சம்.
