கடற்கரையிலே
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :93
பதிப்பு :4
Published on :2013
Add to Cart. திருமங்கை மன்னன் தமிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலைசிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும், கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந்நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளி கொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமானை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கையாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார் : "தொண்டை நாட்டுப் பண்டைத் துறைமுகமே! நீ, மல்லை என்னும் பெயருடையாய்; எல்லையற்ற புகழுடையாய். உன் கடற்கரையிலே குன்றும் மணலும் கொஞ்சி விளையாடும். உன் அளப்பரும் பெருமையை அறிந்தன்றோ மாமல்லை என்று உன்னைப் போற்றினார் எங்கள் மாதவச் செல்வர்?
பூதத்தாழ்வார் மகாபலிபுரம் மல்லையிலே பிறந்த மாதவர்
" மாமல்லை கோவில் மதிட்குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திருவாக்கு.
பூதத்தாழ்வார் மகாபலிபுரம் மல்லையிலே பிறந்த மாதவர்
" மாமல்லை கோவில் மதிட்குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திருவாக்கு.