
கலைஞரின் சிறுகதைகள் மீள்வாசிப்பு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முதுமுனைவர் ந. அறிவரசன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2023
Add to Cartகலைஞர் கற்பனைப் பாத்திரங்களைப் படைப்பதற்கு ஓர் உண்மையான காரணம் இருந்தது.அது உண்மையிலேயே ஒரு வகையில் கற்பனை இல்லை. தமிழகம் மேன்மையுற ஒரு புத்துலகம் அமைக்க வேண்டும். அதற்காகத் தமிழ் மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும். அந்த ஆயத்தமான நெறிகளைக் கலைஞர் பாத்திரங்கள் பேசின. அவற்றில் நெறி பிறழ்ந்தவைகளும் இருந்தன. அவர்களையெல்லாம் நம் கண்முன்னே வந்து நிறுத்தினார். அதற்காக நீண்ட, நெடிய ஆழமான திராவிட இயக்கக் கொள்கைகளில் அறிவரசன் திளைப்பதை நூலில் அவர் வைக்கும் கருத்துகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
'கலைஞரின் சிறுகதைகள் மீள் வாசிப்பு' எனும் நூலாக்கி அறிவரசன் நமது கரங்களில் தந்து இருக்கிறார். நமது கரங்களில் தந்தது மட்டுமன்றி படிப்போர் தம் கருத்தை. சிந்தனையை, அகல உழாமல், ஆழமாக உழுகின்ற உழைப்பை, வகுப்பில் பாடம் நடத்துவது போன்ற ஒரு பக்குவத்தை அறிவரசன் கைவரப் பெற்றவராக இந்நூலின் வழி தெரிகிறார். அவரது இந்த ஆற்றல் திராவிட இயக்க அரசியர் கல்வியை அறியாதாருக்கும் அறியச் செய்யவும், பயிற்றுவிக்கவும் இந்நூல் ஒரு வகையில் பயன்படும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
