book

பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்

Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :111
பதிப்பு :8
Published on :2006
Add to Cart

''இன்னிலை'' என்னும் இந்நூல் '' கீழ்க்கணக்கு'' என்னும் பெயரால் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் ஒன்று. நூல்கள் ''மேற்கணக்கு'' எனவும் ''கீழ்க்கணக்கு'' எனவும் இருவகைப்படும். ''மேற்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்நூறு வரையில் கொண்டு அறம் பொருள் இன்பங்களை விரித்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம். '' கீழ்க்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொள்ளாத வெண்பா அல்லது வெண்செந்துறை பெரும் பான்மை ஐம்பதுக்கு மேலும் ஐந்நூற்றுக்குக் கீழும், சிறுபான்மை ஐம்பதுக்கும் கீழும் ஐந்நூற்றுக்கு மேலும் கொண்டு அறம் பொருள் இன்பங்களை விரித்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம்.