
ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. சதானந்தன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2020
Add to Cartபதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காழிக் கண்ணுடைய வள்ளல் அவர்கள்
ஒழிவிலொடுக்கம் என்ற நூலை இயற்றினார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இந்த நூலின் 253 வெண்பாக்களுக்கும் உரை
விளக்கம் செய்தார். இந்நூலில் அமைந்துள்ள நான்கு அடிகள் கொண்ட
சிறப்புப்பாயிரத்திற்கு மட்டும் திருவருட்பிரகாச இராமலிங்க அடிகள் ஏறத்தாழ
23 பக்கத்திற்கு விருத்தி உரை தந்து 1851 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
திருஞானசம்பந்தரின் பெருமையைப் போற்றும் இச்சிறப்புப் பாயிரத்திற்கு
இராமலிங்க அடிகள் எழுதிய விருத்தியுரையைப் படிப்பதற்கும் ஆழ்ந்த புலமை
வேண்டும் என்பதை அவ்விருத்தியுரையைப் பயில்வோர் ஒப்புக்கொள்வர். இராமலிங்க
அடிகள் எழுதிய 23 பக்க விருத்திவுரைக்கு இந்நூலாசிரியர் முனைவர்
சி.சதானந்தன் அவர்கள் 100 பக்கத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். எனவே
நான்கு அடிகள் கொண்ட ஒழிவிலொடுக்கச் சிறப்புப்பாயிரப் பாடலுக்கு இராமலிங்க
அடிகளாரால் 23 பக்கம் விருத்தியுரையும் பேராசிரியர் சதானந்தன் அவர்களால்
100 பக்கம் விருத்தியுரைக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது எனில்
அவற்றுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துகளை எண்ணியெண்ணி நாம் வியக்கும்
நிலையில் உள்ளோம். இந்நூலின் முதல் பாதி ஒழிவிலொடுக்கம் நூலை எழுதிய
கண்ணுடைய வள்ளல் குறித்த வரலாற்றையும் அதற்கு உரை வரைந்த திருப்போரூர்
சிதம்பர சுவாமிகள் குறித்த வரலாற்றையும் சிறப்புப் பாயிரத்திற்குத்
திருவருட்பிரகாச இராமலிங்க அடிகள் எழுதிய விருத்தியுரையையும் கொண்டு
விளங்குகின்றது. அடுத்த பாதி இராமலிங்க அடிகள் எழுதிய ஒழிவிலொடுக்க
விருத்திக்கு விளக்கத்தைத் தருகிறது. கற்றறிந்த சான்றோர்கள் மட்டுமல்லாது
பாமர மக்களும் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் மிகச்சிறந்த
விளக்கமான நீரோட்டமான நூலாக இந்நூலை முனைவர் சி.சதானந்தன் அவர்கள்
இயற்றியுள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
