பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சி. சதானந்தன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2020
Add to Cartபதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவர்கள்
குன்றக்குடி முருகன் பேரில் பாடிய பழனியாண்டவர் கலித்துறை எனும் இந்நூல்
கையெழுத்துப் பிரதிச் சுவடியிலிருந்து முதன்முறையாகத் தெளிவான
விளக்கங்களுடன் கூடிய தெளிவுரையுடன் வெளிவருகிறது. கற்றறிந்த
சான்றோர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் பாமர மக்களுக்கும் மிக
எளிமையாகப் புரியும் வகையில் புராணக்கதைகளுடனும் பிற இலக்கியச்
செய்திகளுடனும் முனைவர் சி.சதானந்தன் அவர்கள் இந்நூலை வடிவமைத்துள்ளமை
பாராட்டத்தகுந்ததாகும்.
தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்துத் தந்தவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் உவே.சாமிநாதையரின் பதிப்புரை போன்று இந்நூலின் பதிப்புரை விளங்குவது இந்நூலுக்குரிய தனிப்பெரும் சிறப்புகளுள் ஒன்றாகும். இந்நூல் எதிர்வரும் இளம்பதிப்பாளர்களுக்கு வழிகாட்டக் கூடியதாக விளங்கும் என்பது உண்மை . இந்நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவுரை, அருஞ்சொற்பொருள், சில சிந்தனைகள் என்ற வரிசையில் உரை வகுக்கப் பெற்றுள்ளது. நூலாசிரியர் தம் பாடலில் சொல்லிய கருத்துகளில் ஒன்றையும் விடாமலும் சொல்லாத செய்தியைத் தாமாக இட்டுக்கட்டிக் கூறாமலும் உரை வகுப்பது நல்ல ஓர் உரையின் அழகாகும். அந்த வகையில் நேர்த்தியாகவும் சீர்த்தி மிகுந்ததாகவும் மிகுந்த கவனத்துடன் முனைவர் சி.சதானந்தன் அவர்கள் இந்நூலுக்கு உரை வகுத்துள்ளார் எனலாம் தெளிவுரையில் விரிவாகச் சொல்ல இயலாதனவற்றையும் வாசகர்களுக்கு இதனைச் சொன்னால் மேலும் நன்கு இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள முடியும்.