book

சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் செ. செந்தில்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

மனித் இனம் தோன்றிய காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரையிலும் பண்பாட்டில் தனக்கெனத் தனித்த அடையாளத்தோடு வாழ்ந்து வருபவர்கள் தமிழ்க்குடி மக்களாகும்.இவர்களது பண்பாட்டு மரபுகளிம், வாழ்க்கை முறைகளும் காக்கப்பட வேண்டியவை. இயற்கையோடு  இயைந்து வாழும் அவர்களது இயல்பு தனிச்சிறப்பானது. சங்ககால மக்களைக் குறித்து அறிந்துகொள்ள விழைவோருக்கும், ஆய்வு செய்ய முனைவோருக்கும் பல அரிய தரவுகளை உள்ளடக்கிய பண்பாட்டு பேழையாக இந்நூல் அமையும் என்பதில் ஐயமில்லை.

சங்ககால மக்களது வாழ்வியல் நெறிகள், சமுதாயப் போக்குகள், விருந்தோம்பல், விழாக்கள், பொதுநலம், பகுத்துண்ணல், ஈகை, உறவுமுறை, விட்டுக்கொடுத்து வாழும் தன்மை, நட்பு நெறி, போன்றவை இன்றைய மனித இனத்திற்கு தேவையானது. மேலும் பெண்களின் இல்லற நிலை, கற்பு நெறி, கைம்மை, பரத்தை மடலேறுதல் மற்றும் மக்கட் பேறு ஆகியவற்றை தக்கச் செய்யுளுடன் கூறியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.