book

சிறப்புக் கல்வி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. நாகராஜன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :148
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

கல்வித் தந்தை உயர்திரு. எம்.ஜி. பரத்குமார் M.A., B.Ed., தலைவர், மஹேந்திரா கல்வி அறக்கட்டளை அவர்களின் நல்லாசியுடன் இந்தப் புத்தகம் எழுதப் பட்டது.
பொதுவாக அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அறிவாளியாக, நுண்ணறிவுத் திறன்மிக்க வர்களாக, உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மேலும் தன் குழந்தை உயர்கல்வி பெற்று உயர் பதவி பெற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அனைத்து பெற்றோர்களின் ஆசைகளும் நிறைவேறுகிறதா என்றால் இல்லை என்ற பதில் இருக்கத்தான் செய்கிறது. சிலரது ஆசைகள் மட்டும் நிறைவேறுகின்றன.
சில பெற்றோர்களின் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் இன்றி, உடல் ஊனமுற்றவர்களாகவும், சில குழந்தைகள் அறிவு வளர்ச்சி குறைந்த, மனவளர்ச்சி குன்றியவர்களாகவும், காது கேளாத் தன்மையுடனும், பார்வைக் குறையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வகையான குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேற இந்த வகையான குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும். அந்தப் பயிற்சிக்காகவும், கல்வியியலில் B.Ed., மற்றும் M.Ed., கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வு நோக்கோடும் மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் இந்தப் புத்தகம் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன். இந்நூலை பிழைதிருத்தம் செய்து உதவிய அருமை நண்பரும் மகேந்திரா கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளருமான திரு. மா. சிவகுமார் எம்.ஏ., எம்.எட்., எம்.பில் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.