book

ஆடல்வல்லான்

₹500
எழுத்தாளர் :ச. தண்டபாணி தேசிகர்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :495
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389707564
Add to Cart

கலை என்பது அழகின் செறிவு; கருத்தின்  பதிவு; கவர்ச்சியின் நிறைவு; மகிழ்ச்சியின் உறைவிடம்; பண்பாட்டின் சிகரம்; வளர்ந்த நாகரிகத்தின் சின்னம்; இவ்வண்ணம் எல்லாந்தான்.

கடவுள் எங்கும் பரவி என்றும் விளங்குவது போலக் கலையும் எங்கும் பரவி என்றும் விளங்கத்தான் செய்கிறது. ஆனாலும், கடவுள்  அன்பர்கள் மனத்தில் அவரவர்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப நிரம்பி, அவர்களுடைய சொற்கடோறும் செயல்கடோறும்  விரவி வெளிப்படுவதுபோல, கலையும் இயற்கையை- இயற்கையில் இறைவன் கலந்துள்ள  நிலையை- இயற்கை எல்லாப் புலன்களுக்கும் இன்பம் ஊட்டுதலை உற்றறிந்து ஓர்ந்துணர்ந்த  கலைஞன், அனுபவங்களைத் திரட்டி, மிகாமலும் குறையாமலும்  கைவழியாகவும் வாய்வழியாகவும் உரையாகவும் உருவாகவும் அளவாக வார்த்துக் கொடுக்கின்றபோது வெளிப்படுகிறது.