கவி பாடலாம்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜகந்நாதன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :7
Published on :2008
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், தகவல்கள்
Add to Cartதமிழ் மொழியில் புதிய மலர்ச்சி தோன்றியுள்ள காலம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக இருந்தாலும் புதிய துறையில் உரைநடை இலக்கியங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றி வளரலாயின. உலக முழுவதுமுள்ள பல்வேறு மொழிகளிலும் உரைநடை இலக்கியங்களே பெருவெள்ளமாக இப்போது வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும, தமிழில் புதிய கவிதைகளைப் பாடும் ஊக்கத்துக்குக் குறைவில்லை. சில காலமாக இந்த ஊக்கமும் முயற்சியும் பல மடங்கு பெருகிவிட்டன.மேடையில் பேச வேண்டும் என்ற ஆவல் எவ்வாறு பலருக்கும் உண்டாகியிருக்கிறதோ, அவ்வாறே கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இப்போது பலருக்கு உண்டாகி வளர்ந்து வருகிறது. பத்திரிகைகள் கவிதைகளை வெளியிடுவதோடு, அங்கங்கே அடுத்தடுத்துக் கவியரங்கள் நடைமெறுகின்றன.