book

நீதிபதிகள் நீதிமான்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருச்சி செல்வேந்திரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

நேர்மையற்ற முறையில் செயல்பட்ட குற்றச்சாட்டில் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கியுள்ளார் என்று ஆரம்பித்த அந்தச் செய்தியில், உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் அதை மீறி மாணவர் சேர்க்கை நடத்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளித்த நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது முதல் நிலை விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, அவர் பதவி விலகச் சொல்லி அறிவுறுத்தப்பட்டார்; அவர் மறுக்கவே அவர் தனது நீதிமன்றப் பணிகளைத் தொடரத் தடை விதிக்கப்பட்டது. சிபிஐ விசாரணையிலும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவே நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.