உணர்ச்சிகளின் ஊர்வலம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :8
Published on :2021
Add to Cart"இதுபோல் ஓர் ஊர்வலத்தை இந்த ஊரே பார்த்ததில்லை என்று இங்கே பலரும் சொன்னார்கள். ஊர்வலங்கள் முடிந்து கொண்டாட்டம் தொடங்க நேரமாகி விட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்கள். நானும் யாரிடமோ மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருக்கிறது! ஊர்வலம் முடிந்து திரும்புகிற வரை சில உற்சாகங்கள் நமக்காகக் காத்திருப்பதில்லை. காலதாமதமாகக் கொண்டாட முயல்கையில் சில கொண்டாட்டங்களே காலமாகி விடுகின்றன."
கவியரசர் ஏன் இப்படிப் பேசுகிறார்? இதற்கு என்ன அர்த் தம் என்று புரியாமல் கூட்டமும் மேடையிலிருந்தவர்களும் திகைத்தார்கள். இதற்கு அர்த்தம் புரிந்த - புரியக்கூடிய ஒரே ஆத்மா அப்போது அந்த ஊரில் இல்லை. மயானத்தில் தீக்கிரையாகி அவள் உடல் சாம்பலாகிக் கொண்டிருந்தது.