book

சந்திர வாள்

₹640
எழுத்தாளர் :ராசிதா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :635
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

நாம் ஒவ்வொருவரும் கடந்த காலச் சரித்திரத்தை ஏதோவொரு வகையில் அறிந்துகொள்வது நம்மை நாம் யாரென்று அறியவும் நம் முன்னோர்களின் பராக்கிரமங்களை உணரவும் பெரிதும் உதவும். சரித்திரம் சமுத்திரத்திற்கு ஈடானது என்ற போதிலும், அதில் ஒரு துளியையேனும் தங்களிடம் கொண்டு சேர்க்கும் கடமைப்பட்டவளாக, இந்தச் சந்திர வாள் என்னும் சரித்திரப் புதினத்தின் மூலமாக, நம் முன்னோர்களின் வீரம், தீரம்,பராக்கிரமம் மட்டுமின்றி, பழக்க வழக்கம், வர்த்தகம், ஆட்சி முறை, நிர்வாகக் கட்டமைப்பு, படைகளின் பலம் எனப் பலவற்றையும் இயன்ற அளவு கதையோடு புனைந்து அளித்துள்ளேன். 18 சரித்திரமென்பது சமுத்திரமட்டுமல்ல; சக்கரமும் கூட! சக்கரம் எவ்வாறு சுழன்றுகொண்டே இருக்கின்றதோ அவ்வாறே, சரித்திர நிகழ்வுகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. வீழ்ச்சியென்பதையே கண்டிராத இராஜ்யங்கள் அழிந்ததுமுண்டு, அடிமையாக இருந்த இராஜ்யங்கள் தலை தூக்கி நிமிர்ந்ததுமுண்டு. அவ்வாறு இருக்க, இந்தப் புதினமானது, பாண்டியர்கள் புகழின் உச்சியை நெருங்கிக்கொண்டிருந்த காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.