book

மாண்புமிகு முஸ்லிம் பெண்மணிகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாத்திமா ஷாஜஹான்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

“பெண், இறைவனின் புனிதமான படைப்புகளில் ஒன்று. உலக அற்புதங்களில் தலை சிறந்தது. அதிலிருந்தே மனித உற்பத்தியே துவங்குகிறது. எனவே தான் ஒரு அறிஞனும், “இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் பெண் இனத்திற்கே பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். அதிலிருந்து நாம் உடலும் உயிரும் பெறுகிறோம். அதுவே நம் வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்குகிறது” என்று கூறிச் சென்றான் ஓர் அறிஞன். ஆம்; பெண் இன்றேல் இவ்வுலகமே இல்லை. உலக இன்பமே இல்லை. எனவேதான் முதல் மாமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்த இறைவன் அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வாவைப் படைத்து மனித உற்பத்திக்கு வழி கோலினான். ஆதம்-ஹவ்வா தம்பதிகளின் மக்களாக அவனியிலே ஆண்களும் பெண்களும் தோன்றினர். அவர்களின் முதல் மகன் காபீல் தீயோனாக இருந்தான். அடுத்த மகன் ஹாபீலோ நல்லோராக விளங்கினார். அவர்களின் மகள் அக்லிமியா தீயவளாக இருந்தாள். யஹூதா நல்லவராக வாழ்ந்தார். இவ்வாறு ஆணும் பெண்ணும் கலந்து, கலந்து பிறக்க அவர்களில் சிலர் நல்லவர்களாகவும் சிலர் தீயவர்களாகவும் இருந்தனர். அவர்களில் சிறந்த ஆண்கள் பெண்களின் மென்மையில் சிறிதளவையும் அவர்களில் சிறந்த பெண்கள் ஆண்களின் வன்மையில் சிறிதளவையும் பெற்றவர்களாக விளங்கினார்கள். இந்தக் கலவைதான் அவர்களை மாண்புறச் செய்தது. முஸ்லிம் தாய்குலம் இத்தகு மாண்புமிகு ஆண்களையும் பெண்களையும் ஈன்றளிக்கத் தவறவில்லை. வீட்டிற்குள் அடக்கமாக இருந்த, அவசியம் கருதி வெளியே வந்து அருஞ்செயலாற்றிய மாண்புமிகு முஸ்லிம் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்த இனிய நிகழ்ச்சிகளைப் பல்வேறு நூல்களிலிருந்தும் தேடிச் சேகரித்து இந்நூலைச் சமைத்துள்ளேன். இந்நூல் முஸ்லிம் தாய்க் குலத்திற்கு மட்டுமல்ல, அனைத்து சமுதாய தாய்க் குலத்திற்கும், சிறுமிகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நான் இதனை தாய்க் குலத்கிற்கே அர்ப்பணம் செய்கின்றேன்” என்று இந்நூலின் ஆசிரியர் பாத்திமா ஷாஜஹான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.