book

அண்ணல் எங்கள் ஆருயிர்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :7
Published on :2013
Add to Cart

“அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்றான் இறைவன் தன் திருமறையில். அந்த அழகிய முன்மாதிரியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இச்சிறு நூல் தன்னளவில் கூற முயலுகிறது. இதில் அவர்களின் நடை , உடை, நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றியும் புகழ்மிக்க பொன்மொழிகளைப் பற்றியும் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் எத்துனை இணக்கம் இருந்தது என்பதைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. அண்ணல் நபி ‌(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஓர் ஒழுங்கு இருந்ததை இந்நூலைப் படிக்கும் போது தெரிந்துகொள்ள முடியும். “அழகிய முன்மாதிரி” என்று கூறியது எத்துணை சரியானது என்பதையும் அறிந்து கொள்ள இயலும். நம்முடைய முன்மாதிரியாகத் தேர்வதற்கு வேறு எவரையும் விட அவர்கள் எத்துணை பொருத்தமானவர்கள் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் அவசியம் அறிந்து கொள்வார்கள் என்பது என் நம்பிக்கை. இவ்வாறு “அண்ணல் எங்கள் ஆருயிர்” என்ற இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகமது முஸ்தபா அவர்கள் தமது முன்னுரையில் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.