book

இளம் வயதில் இஸ்லாமியப் பெரியார்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2008
Add to Cart

இந்நூலை நான் எழுதியதின் நோக்கம் இஸ்லாமிய பெரியார்களின் இள வயதில் நிகழ்ந்த சுவைமிக்க சம்பவங்களைத் தொகுத்து அளிப்பது மட்டுமல்ல, அவற்றைப் படித்துச் சுவைக்கலாம் தான். பார்த்து வியக்கலாம் தான். ஆயினும் அவற்றில் இருக்கும் படிப்பினைகளைக் கற்று உயர வேண்டும் என்பதே என் நோக்கம். இளையவர்கள் நம் முன்னோர்கள் இள வயதில் எப்படி இருந்தார்கள் எனவும், பெரியவர்கள் இள வயதிலேயே நம் முன்னோர்கள் இப்படி இருந்திருக்கிறார்களே எனவும், உணர்ந்து அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு உயர்வதற்கு உதவ வேண்டும் என்பதே என் விருப்பமாகும். இந்த நோக்கத்துடனும், விருப்பத்துடனும் நான் எழுதியிருக்கும் இந்நூலில் அண்ணல் எம்பெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் அப்துல் கபூர் மௌலானா ஈறாக ஆயிரத்து நானூறு ஆண்டெனும் நீண்ட நெடுங்காலச் சாலையில் கால் வைத்து நடந்தவர்களின் இள வயதுச் சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன. அச்சம்பவங்கள் அனைத்தும் கல்வியில் நம் முன்னோர்கள் எப்படிக் கருத்தைச் செலுத்தினார்கள், வீரத்தை அவர்கள் எப்படி மதித்து வளர்ந்தார்கள், ஒழுக்கத்தில் அவர்கள் எப்படி உயர்ந்திருந்தார்கள் என்பவற்றை உணர்த்துகின்றன. அவை உணர்த்தும் உண்மைகள் இன்று நமக்கு மிகவும் அவசியம் என எண்ணியே இந்நூலை எழுதி இருக்கின்றேன். இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகமது முஸ்தபா தமது முன்னுரையில் கூறுகிறார்.