தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)
₹990
எழுத்தாளர் :புலவர் கா. கோவிந்தன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :824
பதிப்பு :1
Published on :2022
Add to Cartபி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய HISTORY OF TAMILS என்ற இந்த நூல்
கி.பி. 600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும்
ஓர் அருமையான நூலாகும். இந்நூலின் தமிழாக்கத்தினை புலவர் கா.கோவிந்தன்
அவர்கள் தமிழர் வரலாறு என்ற பெயரில் எழுதியுள்ளார். மீண்டும் உலக அரங்கில்
தமிழ் மக்கள் கைகளில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளத் இந்நூலினை தவழ
விடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். -பதிப்பாளர் தமிழர் வரலாறு என்ற
இந்நூலின் ஆசிரியர் கடைப்பிடித்திருக்கும் ஆங்கில மொழிநடை, மிகச் சிறந்த
இலக்கிய நலம் வாய்ந்த ஒன்று; அதைத் தமிழில் மொழிபெயர்ப்பது அத்துணை எளிய
செயலன்று என்பதால் அம் முயற்சியை மேற்கொள்ளச் சிறிது அஞ்சினேன். ஆயினும்,
இதுகாறும் அது செய்ய யாரும் முன் வராமையாலும், கால்டுவெல் அவர்களின்
திராவிட மொழி ஒப்பிலக்கண நூலின் என் மொழிபெயர்ப்பு நூலை அறிந்த பலரும்,
இதையும் மொழிபெயர்க்குமாறு ஊக்குவித்தமையாலும், மொழிபெயர்ப்புப் பணியினை
மேற்கொண்டேன். 1983இல் மேற்கொள்ளப்பட்டது 1987ல் முடிவுற்றது. ஆனால்
1989இல் தான் அச்சேற முடிந்தது. -புலவர் கா.கோவிந்தன்