book

அமரர் கல்கியின் மகுடபதி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :7
Published on :2017
ISBN :9789380217826
Add to Cart

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம்போலத்தான் ஒரு மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை.  காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப்போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த ரிஉள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்ப்படாத முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்த இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தைவிடப் பயங்கரமாகத் தோன்றியது.