book

கயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

சதகம் என்பது 100 பாடல்களை உடைய நூல் என்பது பொருள். இராசிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் கைலாசநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டிருக்கும். கைலாசநாதர் சதகத்தில் காப்பு, வாழி என இரு பாடல்களுடன் 102 பாடல்கள் உள்ளன. இராசிபுரத்தின் வளமையை வானுயரப் பாடுகின்றது. ஒவ்வொரு பாடலும் 14 சீர்களைக் கொண்டிலங்குகின்றது.
இச் சதகம் நான்கு வகையான குலமரபு, பலவகையான வாழ்வியல் நீதிகள், நாற்கவிகளும் பாடும் முறை, 32 இராகங்கள், புராணங்கள், கலிகாலத்தில் ஆட்சி செய்த அரசர்கள், சகுனபலன், கொக்கோகம், கர்ப்போட்டம், சாத்திரங்கள், புலவர் - வள்ளல் - கஞ்சன் - கற்றோரின் குணநலன்கள் என இந்நூல் நுவலும் பொருள்களாக இரண்டாம் பாடல் தெரிவிப்பதைக் காணலாம்.
சிதம்பரம்பிள்ளை அவர்கள் இயற்றியுள்ள இதயம் கவரும் இச்சதகத்திற்கு இன்னுரை பலகண்ட உரையாசிரியர் டாக்டர் கதிர்முருகு அவர்கள் எளிய இனிய இலக்கிய நயம் மிகுந்த நடையோட்டமுள்ள தெளிவுரையினை வரைந்துள்ளார்.