
இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயன், விஜயன்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788189867485
Add to Cart''நாம் ஓர் அரசுக்குள் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்க வில்லை; அரசுகள் என்னும் அமைப்புக்குள்ளும் (system of states) வாழ்ந்துகொண்டிருக்கிறோம்'' என்ற கருத்து இங்கு கவனிக்கப்படத்தக்கதாகும். ஓர் அரசுகள் என்னும் முறைமைக்கும் இடையிலான உறவே வெளிநாட்டுறவு என்பதாகும். இந்தவகையில், உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எந்தவொரு நபரும் ஒரேநேரத்தில் ஓர் அரசுக்கும் அரசுகள் என்ன்னும் முறைமைக்கும் உட்பட்டவராய்க் காணப்படுகிறார். அரசுகள் என்னும் முறைமைக்கு உட்படாமல் அரசு என்ற ஒன்று இருக்கமுடியாதாகையால், எந்தவொரு அரசும் அரசுகள் என்ற முறைமையை உதாசீனம் செய்து பொதுவிற் தீர்மானங்களை எடுக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இது முழுமையாகப் பொருந்தும். ஆகவே சர்வதேச நிலைமை, வெளியுறவுக் கொள்கை (எமது தோக்குநிலையிலிருந்து) என்பன போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்கப்படமுடியாத முக்கிய அம்சங்களாகும்.
