செகாவ் கதைகள்
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி, அன்டோன் செகாவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :351
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788196413002
Add to Cartஉலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும் கொண்டவை அவர் எழுத்துகள். நம் அச்சங்களை, காயங்களை, ஏமாற்றங்களை ஒரு தேர்ந்த உளவியலாளர் போல் செகாவால் கையாளமுடியும். இதிலுள்ள ‘கறுப்புத் துறவி’ அத்தகைய ஒரு கதை. செகாவிடம் ஒருமுறை உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டால் அதன்பின் உங்களால் விடுபடமுடியாது. விடுபடவும் விரும்பமாட்டீர்கள்.