ஊமத்தம் பூக்கள்
₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :243
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390771998
Add to Cartஇந்த கதை 1998 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. '' டாக்டர்! இன்னும் ஒரே ஒரு கேள்வி... இந்த இன்டர்வென்ஷனல் கார்யாலஜி எந்த வகையில் பாதுகாப்பானதுன்னு சொல்றீங்க...?'' ஏழெட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் வியர்வை பூத்த முகத்தோடு வசமாகச் சிக்கியிருந்தார் கார்டியாலஜிஸ்ட் அனந்தகிருஷ்ணன். போன மாதம் ஐம்பத்தைந்து வயதை முடித்துக் கொண்ட அனந்தகிருஷ்ணனுக்கு, அந்தக் காலத்து ரங்காராவ் தினுசில் குபீர் உயரத்தோடு கூடிய தோற்றம். முந்திரி நிற சஃபாரி, அவருடைய சதைப்பூச்சான உடம்பைக் கச்சிதமாகக் கல்வியிருக்க... வீடியோ காமிரா வெளிச்சம் கக்கியபோதெல்லாம் அவர் அனிந்திருந்த கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி நான் இருபத்திரண்டு காரட் என்று வாக்குமூலம் கொடுத்தது.