
அப்புறம் அனிதா - இப்படிக்கு இறந்து போன ரமா (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :179
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771684
Add to Cartஅனிதா அந்த செவ்வாய்க்கிழமை சாய்ந்தரம் காலேஜிலிருந்து வீடு திரும்பிய போது தன் வீட்டு வாசலில் அந்த உயர்ந்த ஜாதிக் கார் நின்றிருப்பதை பார்த்து ஒரு விநாடி அயர்ந்து போனாள். கார் அருகே நின்றிருந்த வெள்ளை யூனிபார்ம் அணிந்த டிரைவர் வெகு தோரணையாய் இருந்தான். அந்த வெளிர் சாம்பல் நிற கார் தன் நெற்றியில் என் தாயகம் ‘இத்தாலி' என்று சொல்லியது.
ஒரு தனியார் கம்பெனியில் எழுநூற்றி சொச்ச ரூபாய் சம்பளம் வாங்கும் தன்னுடைய அப்பாவுக்கு இந்தக் காரில் வந்திருப்பவர் நிச்சயமாய் சிநேகிதராய் இருக்க முடியாது. அனிதா காரையும், டிரைவரையும் தன் பார்வையால் குளிப்பாட்டிக் கொண்டே உள்ளே போனாள்.
என்ன - உள்ளே நுழைகிற அனிதாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் காலேஜில் படிக்கும் அனிதா வருகின்ற வருஷம் பி.ஏ.வை பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்யப் போகிறவள். ஒரு ஃபாரின் பிளேடின் கூர்மை அவளுடைய மூளைக்கு. எந்த நிறத்தில் சேலை கட்டினாலும் அழகாய்த் தெரிவாள். எந்தப் பெண்ணுக்குமே கிடைக்காத ரோஜா நிறம். கண்களைப் பற்றியும், உதடுகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் கதை நகராது. கழுத்தும், கழுத்தைச் சார்ந்த பிரதேசங்களும், இடுப்பும், இடுப்பைச் சார்ந்த பிரதேசங்களும் ஏக செழிப்பு. அனிதா நிறைய சினிமா பார்ப்பாள். பிடித்த டைரக்டர் யார் என்று கேட்டால் விட்டலாச்சாரியார் என்று சொல்லுவாள். ப்ளேபாய் ஜோக்குகளை பிறர் சொல்லக் கேட்டால் உவ்வே என்று குமட்டுவாள். அனிதாவுக்கு பின்னால் கோவை நகர ரோமியோக்கள் விழுந்து விழுந்து சுற்றினாலும், அவள் யாரையும் காதலிக்காதவள். அப்பா தீர்த்தகிரிக்கும் அம்மா பத்மாவதிக்கும் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் பிறந்த ஒரே சீமந்த புத்திரி.
