
மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789395988407
Add to Cartகோகிலாம்பாள் என்னும் தலைமகள் தன் காதல் கணவருக்கு எழுதிய கடிதங்களாகக் "கோகிலாம்பாள் கடிதங்கள்" அமைந்துள்ளன. இக்கடிதங்கள் இயற்கைக்கும்,உலக நடப்புக்கும் ஏற்ப எழுதப்பட்டுள்ளன. கோகிலாம்பாள் பார்ப்பன இனத்தவர் என்பதால் தொடக்கத்தில் அவளது கடிதங்களில் வசொற்கள் மிகுந்தும், நாள்செல்லச் செல்ல அவள் தமிழ்ப் பயிற்சி மிக்கவளாக விளங்குவதால் தனித்தமிழ் நடை கொண்டளவாகவும் இக்கடிதங்கள் அமைந்துள்ளன. இக்கடிதங்கள் யாவும் 90 கதை போன்று விவரிக்கப்பட்டுள்ளன. கோகிலாம்பாள், அவளது பெற்றோர், அவளது பாட்டன், மாமன் வரலாறு இவை யாவும் இக்கதையினை நடத்துபவர்களாக அமைந்துள்ளன. காதல், கற்பொழுக்கம் இவற்றின் பெருமையும் தமிழ் மொழியின் உயர்வும். முழுமுதற்கடவுளின் விளக்கமும் என இக்கடிதங்களில் இவை யாவும் உயிராக அமைந்துள்ளன.
தமிழ்மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் பற்றிய விவாதங்களும், தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளும் பெருமைகளும், உறவுகளின் மேன்மைகளும் இக்கடிதங்களில் அமைந்து சிறக்கின்றன. ஒரு கதைசொல்லியின் கதை கூறலாகவே இக்கடிதங்கள் அமைந்து சுவை சேர்க்கின்றன. கடிதங்கள் மூலம், தமிழ் இலக்கியத்தின், தமிழ் மொழியின் மேன்மையை உணரச் செய்துள்ளார், ஆசிரியர். இவ்வாறு அமைந்துள்ள 17 விரிவான கடிதங்களை அடுத்தே, மறைமலை அடிகள் எழுதிய கடிதங்கள் உள்ளது .
அவற்றுள் மறைமலையடிகள் எழுதிய கடிதங்களாக 34 கடிதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் 5 ஆங்கில மொழியிலானவை. பிற 29 கடிதங்களும் பொங்கல் வாழ்த்து திருவாசக விரிவுரை, உண்மை அன்பு, ஆறுதல், நன்றி எனப் பல பெயர்களில் பல்வேறு பொருள் குறித்தனவாக அமைந்தவை, அட்டையில் எழுதுவதாயிருந்தால் மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவேன். உறைக்குள் எழுதுங்கடிதமாய் இருந்தால் பிறர் பாரார் - ஆதலின் தமிழில் எழுதுவேன். யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்.
இவை யாவும் தமிழ் மொழியின் இலக்கிய வளம் சேர்ப்பன. இந்த அரிய நூல் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், எமது பதிப்பகம் வழி மீண்டும் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
