book

ஜூலியஸ் சீஸர்

Julius Ceaser

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :256
பதிப்பு :2
Published on :2014
ISBN :9789382577829
Add to Cart

சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிசயம்தான், ஜூலியஸ் சீஸர். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் உதித்த ஒப்பற்ற மாவீரன். மாவீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக கொண்டாடுகிறோம். உதாரணமாக, ஆகப்பெரிய ஆளுமை என்று அலெக்சாண்டரை ஆராதிக்கிறோம். வியூகம் வகுப்பகுதில் வல்லவன் என்று செங்கிஸ்கானை வியக்கிறோம். முடிவெடுப்பதில் முதன்மையானவன் என்று நெப்போலியனைக் கொண்டாடுகிறோம். இவர்கள் அனைவருடைய அற்புத குணங்களையும் ஒன்றுதிரட்டி, அதற்கு உருவம் கொடுத்தால், அவர்தான் ஜூலியஸ் சீஸர். சீஸரை விலக்கிவிட்டு வீரம் பற்றிப் பேசமுடியாது. சீஸரைத் தவிர்த்துவிட்டு தலைமைப் பண்பு பற்றிப் பேசமுடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சுமங்களை ஆராய முடியாது. ஆனால் அவரைப் பற்றிய முழுமையான பதிவு எதுவும் தமிழில் வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். உண்மையில், சீஸரைப் பற்றி வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் அநேகம்