book

இப்படிக்கு ஒரு இந்தியன் - A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :226
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771417
Add to Cart

போலீஸ் கண்ட்ரோல் ரூம். மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கண்ட்ரோல் ரூம் ஆபீஸர் பத்மநாபன் டெலிபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டு ரிஸீவரை எடுத்தார். மறுமுனையில் ஒரு ஆண்குரல் கேட்டது. “கண்ட்ரோல் ரூம்.” “நான் பப்ளிக் பிராஸிக்யூட்டர் வெற்றிவேலவன் பேசறேன்.” “ஓ... நீங்களா... குட் ஆஃப்டர்நூன் ஸார்.” “ஒரு முக்கியமான - விபரீதமான விஷயத்தை கன்வே பண்ணத்தான் இப்ப உங்களுக்கு போன் பண்ணினேன்.” “சொல்லுங்க ஸார்... என்ன விஷயம்?” “மயிலாப்பூரிலிருந்து மந்தவெளிக்குப் போற வழியில் அலர்மேல் மங்கை நகர் பஸ் ஸ்டாப் ஒண்ணு இருக்கு...” “தெரியும் சொல்லுங்க...” “அந்த பஸ் ஸ்டாப் ஷெல்டரைச் சுற்றி நிறைய விளம்பர போர்டுகள் இருக்கும். சித்த வைத்தியத்திலிருந்து செல்போன் சர்வீஸ் வரைக்கும் எல்லா விஷயங்களும் அந்த விளம்பர போர்டுகளில் இருக்கும்... பார்த்து இருக்கீங்களா...?” “ம்... பார்த்திருக்கேன்” “கொஞ்ச நேரத்துக்கு முந்தி அந்த விளம்பர போர்டுகளுக்கு நடுவில் ஒரு விபரீதமான ப்ளக்ஸ் போர்டைப் பார்த்தேன். அதில் இருக்கிற வாசகங்களைப் படிக்கும் போது மனசுக்குள்ளே லேசா பயம் வருது.” “அந்த போர்டில் அப்படியென்ன வாசகங்கள் இருக்கு ஸார்?” “இப்ப நான் அந்த பஸ் ஸ்டாப் ஷெல்டர்க்கு எதிரே என்னோட காரை நிறுத்திட்டுத்தான் பேசிட்டிருக்கேன். பஸ்ஸுக்கு சில பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... ஆனா அவங்கள்ல யாருமே அந்த போர்டை கவனிக்கலை. நீங்க உடனடியாய் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு தகவல் கொடுத்து அவரை பார்க்கச் சொல்லுங்க. நான் இதே இடத்துல அவருக்காக வெயிட் பண்றேன்...” “உடனே தகவல் கொடுத்துடறேன் ஸார். அந்த ஏரியா இன்ஸ்பெக்டரோட பேர் ருத்ரமூர்த்தி. ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே அவர் அங்கே இருப்பார். ஹி...வில்...டேக்... இம்மீடியட் அண்ட் நெசசரி ஸ்டெப்ஸ் ஸார்.” “ஓ.கே... தேங்க்யூ...!” கண்ட்ரோல் ஆபீஸர் பத்மநாபன் மதிய உணவை மறந்தவராய் இன்ஸ்பெக்டர் ருத்ர மூர்த்தியை தொடர்பு கொண்டார். விஷயத்தை சொன்னதும் மறு முனையில் அவர் பதட்டப்பட்டார். “அந்த ப்ளக்ஸ் போர்டில் இருந்த வாசகங்கள் என்னான்னு நீங்க கேட்கலையா... மிஸ்டர் பத்மநாபன்?” “கேட்டேன்...! அவர் சொல்லலை. நீங்க உடனே ஸ்பாட்டுக்குப் போங்க... அவர் வெயிட் பண்ணிட்டிருக்கார்.” “இதோ கிளம்பிட்டேன்...!”