book

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

Marthuva Aayvukkodangalil Nadappathu Enna

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384646660
Add to Cart

 இரத்த பரிசோதனைகளில் கழிவுகள் உள்ள அசுத்த இரத்தத்தைத் தான் நாம் பரிசோதிக்கிறோம். அசுத்த இரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பார்த்து நாம் பயப்படுகிறோம் என்பதைப் பார்த்தோம்.

இரத்தம் தவிர பிற உடற் கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்துப் பார்க்கலாம். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் பரிசோதனைகளைப் பார்ப்போம்.

நம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன?

இந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும் மலக்குடலின் வழியாக மலமும் நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப்பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.