சத்சங்கம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973199
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான்
நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப்
பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய
முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல்
திசை காட்டுகிறது. நம்மை அடிக்கடி எதிர்நோக்கும், நம் ஆழ்மனதில்
ஒளிந்துகொண்டு கண்சிமிட்டும், நமது பிரக்ஞைக்கே பிடிபடாமல் புகைமூட்டமாக
நம்முள் சலனமாடும் எண்ணற்ற கேள்விகளை இனங்கண்டு, அவற்றுக்கு ஓர் உருவம்
கொடுத்து விடைதேடலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாகக் கட்டமைக்கப்பட்ட
குறிக்கோள்கள் எதுவுமின்றி நம்மை மேம்படுத்தும் முயற்சியில் இந்நூல் வெற்றி
காண்கிறது. கே.எஸ்.சுப்பிரமணியன்