பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :135
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788123427775
Add to Cartஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.