சாமுத்திரிகா லட்சணம் பலன்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விட்டலாபுரம் ராஜன்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2019
Add to Cartஅழகு! இது மனித குலத்துக்கு மட்டுமே இறைவன் அளித்த வரம். இயற்கையின் படைப்பிலே கோடானு கோடி ஜீவராசிகளும் மனித இனமும் படைக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்புகளாக பரிணாம வளர்ச்சி பெறுகின்றன.
மனித குலத்திலும் அப்படித்தான் மனிதர்கள் அனை வரும் ஒரே முக அமைப்பைப் பெற்றவர்கள்தாம் என்றாலும் அதில் சில முகங்கள்-உடலமைப்பு காண்போரை ஈர்க்கும் விதத்தில் அமையப் பெறுகிறது. இதைத்தான் ஆன்றோர்கள் ‘சாமுத்திரிகா லட்சணம்’ என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மாதவியையும், கம்பர் மாயணத்தில் சீதையையும் இந்த சாமுத்திரிகா லட்சணங் களுக்குட்பட்டே அவர்களின் அழகை வர்ணித்துள் ளார்கள்.
இத்தகைய சாமுத்திரிகா லட்சணங்களின் இலக்கணம் பற்றி வாத்சாயனரும் காம சூத்திரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
சாமுத்திரிகா லட்சண அடிப்படையில் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தனிச்சிறப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு லட்சணத்திற்கும் ஒவ்வொரு செயல்பாடு பலன்கள் உண்டு.