book

வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2)

₹700
எழுத்தாளர் :சிவநயனி முகுந்தன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :735
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

சோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதிலில்லாததால், இக்கேள்விகளுக்கு விடையாக என் கற்பனையைப் புகுத்திவிட்டேன். கரிகாலன் என்பவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணாதிசையங்கள் யாவை? என்பது பற்றிய தெளிவான ஆதாரங்கள் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநாநூறு போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றை மையமாக வைத்தே கரிகாலனை உருவகித்திருக்கிறேன். வங்கநாசிகதீசனைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவனுடைய ஆட்சிக்காலம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை என்பதை ஓரளவிற்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டதே 'வேல் விழியாள் மறவன்' என்கின்ற சரித்திர நீள்கதை. இக்கதையைச் சுவைப்படுத்துவதற்கு அநபாயன், பூங்கோதை, நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இக்கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறேன். சரித்திரத்தில் கரிகாலனும், வங்கநாசிகதீசனும் இரும்பிடர்த்தலையனும் இடம் பெற்றிருந்தாலும் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அநபாயனும் பூங்கோதையுமே முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். அப்போதிருந்த ஈழம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் முயன்றவரை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். இன்று ஈழத்தின் வரலாறு பல்வேறு வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்போதிருந்த உண்மை நிலையை வைத்தே இக்கதையை எழுதியிருக்கிறேன். இக்கதையில் வரும் காதலும், ஊடலும், வீரமும், பண்பும் உங்களை இரசிக்க வைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.