மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)
₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேஷ்வரன்
பதிப்பகம் :பெருமாய் புத்தகாலயம்
Publisher :Perumaai Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஎன் அன்பான வாசகர்களுக்கு உங்களின் நேசத்திற்குரிய மகேஷ்வரன் எழுதுகிறேன்.
மாதாமாதம் நீங்கள் தரும் வரவேற்பைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. 'மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை...' நாவலுக்கும் ‘நீ கவிதை நான் காகிதம்’ நாவல்களுக்கும் மலைபோல் குவிந்திருக்கும் வாசகர் கடிதங்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன்.
17 வயதில் எழுத ஆரம்பித்த எனக்கு நாற்பது வயதில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் என்ற இடம் கிடைத்திருக்கிறது. எனது உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் வாசகர் தந்த பரிசாகவே இதை கருகிறேன். இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பயமாகவும் இருக்கிறது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டுமென வைராக்கியம் கொள்கிறேன்.
இனிமை கனவுகள் தொடரட்டும்!' நாவலை வாசித்தீர்களா? அவசியம் விமர்சனம் எழுதுங்கள். இதோ இந்த இதழில் இடம் பெற்றுள்ள மயங்குது நெஞ்சம் நாவல் திரைப்படத்திற்காக நான் பிரத்யேகமாக எழுதிய நாவல். சில தவிர்க்க இயலாத காரணங்களினால் திரைப்படமாகும் பணி தள்ளிக் கொண்டே போனதால் நாவலை உங்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறேன்.
ஒரு விறுவிறுப்பான நெகிழ்வான மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வை உங்களுக்கு தரப்போகிற காதல் கதை இது. ஒவ்வொரு அத்தியாயமும் திரைப்படம் போலவே நகரும்.
வாசியுங்கள் வாழ்த்துங்கள்.