book

ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

அமெரிக்காவில் உள்ள திரைப்பட நகரம் ஹாலிவுட். அது போல இந்தியாவில் அதிகமாகத் திரைப்படங்கள் தயாரிக்கும் மும்பையைப் பாலிவுட் என்றும் சென்னையில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்றும் அழைத்தனர். எத்தனை கவலைகள் இருந்தாலும், எத்தனை துயரங்கள் இருந்தாலும் தனக்கே சொந்தமான அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிறரை சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்தவர் தமிழ்த் திரையுலகின் முடிசூடா நகைச்சுவை மன்னர் என்.எஸ். கலைவாணன். இந்தக் கோலிவுட் நடிகரைப் போல நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்தவர் ஹாலிவுட் நடிகரான சார்லி சாப்ளின் என்பவர். எனவே தான் அவரை ஹாலிவுட் கலைவாணர் என அழைத்தனர்.
அவமானங்களையும் வெகுமானங்களாக ஏற்றுக்கொண்டு வித்தியாசமான புறத் தோற்றத்தில் தோன்றுவதுடன் ஒரு பதுமையான வெளிப்பாட்டுடன் உணர்த்தும் உணர்வுகள், சிந்தனைகள் சிரிக்க வைத்து மகிழ்ச்சியூட்டுவதுடன் நல்வாழ்க்கைக்கு நலமான வழிகாட்டுதலாகவும் அமைகின்றன. அப்படிப்பட்ட உணர்வுகளின் உன்னத கலைஞராகத் திகழ்ந்தவரே சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எளிய முறையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து எழுத்துலகில் வரலாறு படைத்துவரும் சு. அறிவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள நூலே ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்.