
தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. செல்வராஜ்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788197399732
Add to Cartசங்க காலத்தில் அதியமானால் ஆளப்பட்ட தகடூர் நாடு தற்போது தருமபுரி என்று அழைக்கப்பட்டு தருமபுரி மாவட்டமாக விளங்குகிறது. இந்தத் தருமபுரி மாவட்டத்திலுள்ள பழமையான திருக்கோயில்களைப் பற்றி எடுத்துரைக்கும் தொல்லியல் ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது. முப்பத்திரண்டு கட்டுரைகளில்- தொல்லியல் சார்ந்து வைணவக் கோயில்கள் பற்றிய செய்திகளைக் கொண்டது இந்நூல். சோகத்தூர், பெத்தூர், தருமபுரி, ஜக்கசமுத்திரம், கீழ்மொரப்பூர், கிருஷ்ணாபுரம் முதலான பல்வேறு ஊர்களில், பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இத்திருக்கோயில்கள் யாருடைய காலத்தில் எழுப்பப் பெற்றவை? இதன் அமைப்பு, தற்போதைய நிலை, சிற்பங்கள், கட்டடக்கலை ஆகிய நுணுக்கங்கள் முதலான செய்திகள் இந்நூலில் விரிவாக ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளன.
