book

புத்த ஜாதகக் கதைகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1960 ஆம் ஆண்டில் எழுதிய நூல் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். தமிழகத்தில் பௌத்தத்தின் பல்வேறு போக்குகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் செய்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்தர் கூறியதாக வழங்கப்படும் இக்கதைகளையும் தொகுத்துள்ளார். இக்கதைகளில் இறப்பு, வறுமை, துறவு, உபதேசம், நன்றியறிதல் பிக்குகளின் வாழ்க்கைமுறை, சோம்பேறித்தன்மை, சீடர்களின் தன்மை ஆகிய பல்வேறு தன்மைகள் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளன. புத்தர் ஒருகுறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்து வதற்கு இவ்வகையான கதைகளைக் கூறினார் என்பதை புத்த ஜாதகக் கதைகள் என்ற தொகுப்பின் மூலம் அறிகிறோம். ஜாதகக் கதைகள் என்பவை ஒரு வகைமையாகவே அமைந்துள்ளன. பல்வேறு மொழிகளில் பல்வேறு வேறுபாடுளுடன் இக்கதைகள் வழங்கப்படுவதைக் காண்கிறோம். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழ்ச்சூழலுக்கு ஏற்றவகையில் இக்கதைகளைத் தொகுத்திருப்பதை அறிகிறோம். இதன்மூலம் பௌத்த சமயக் கருத்துகள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் காணமுடிகிறது. பல்வேறு இடங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு பயணங்களில் புத்தர் இக்கதைகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.புத்த சமயம் ஒருகாலத்தில் வெகுமக்கள் சமயமாக இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஜாதகக் கதைகளின் அமைப்புகள் உள்ளன. இக்கதைகள் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங் களை மிகச் சுவையாகவும் எளிதாகவும் சொல்லுவதாக அமைந்திருக் கின்றன. இக்கதை மரபை உள்வாங்கி வேறுபல சமயங்களிலும் இவ்வகையான கதைகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.