
கிறித்துவமும் தமிழும்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :116
பதிப்பு :7
Published on :2016
Out of StockAdd to Alert List
தமிழ் மொழி வளர்ச்சிபெற்ற முழு வரலாற்றையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு நெடுநாளாக உண்டு ஆகையால், சமயம் வாய்த்தபோதெல்லாம் அத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தேன்.
இவ்வாறிருக்குங்கால், 1934-ஆம் ஆண்டின் கடைசியில், வித்துவான் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள். M.A.,B.L... சென்னையிற் கூட்டிய தமிழ் மாநாட்டில். சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராகிய திருசத சற்குணர் அவர்கள், BA, "கிறித்துவமும் தமிழும்" என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள், அதனைக் கேட்டபோது, தமிழ் மொழிச் சரித்திர ஆராய்ச்சியில் கருந்தைச் செலுத்திநின்ற எனக்குப் புதியதோர் ஊக்கம் உண்டாயிற்று. கிறித்துவ சமயத்தவரால் தமிழ்மொழி அடைந்த நன்மைகளைக் கூறும் தமிழ்நூல் இதுகாறும் இல்லாமையால், முதலில் இதனை எழுதுவது தான் நலம் எனக்கருதி, இத்துறையில் என் கருத்தைச் செழுத்தி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன்.
மயிலை சீனி.வேங்கடசாமி
