book

கௌதம புத்தர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :5
Published on :2016
Add to Cart

கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.