book

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :25
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவான். இவன், இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்), காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட பல்லவ மன்னன். கலைச் செல்வனாகவும் கலை வள்ளலாகவும் விளங்கினான். சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய அழகுக் கலைகளைக் கற்று அக்கலையின்பங்களை ரசித்ததோடமையாமல், அக்கலை களை வளம்பட வளர்த்து வந்தான் என்பதை இவனுடைய வரலாறு கூறுகிறது. இக்கலை மன்னனால் இயற்றப் பட்டதுதான், மத்தவிலாசம் என்னும் இந்நாடக நூல். இந்நூல், இவ்வரசன் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த காபாலிகம், பாசுபதம், பௌத்தம், ஜைனம் என்னும் மதங்களைப் பற்றிய செய்தியை நகைச்சுவையுடன் நன்கு விளக்குகிறது.
தமிழ்நாட்டிலே காஞ்சீபுரத்திலே தமிழ் அரசனால் இயற்றப்பட்ட இந்நாடக நூல், எக்காரணத்தினாலோ இந்நாட்டில் வழக்கொழிந்துவிட்டது. ஆனால், நற்காலமாக மலையாள நாட்டிலே இந்நூலின் ஓலைச்சுவடிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டு, “திருவனந்தபுரம் சம்ஸ்கிருத வெளியீடு” வரிசைகளில் ஒன்றாக இந்நூல் அந்த அரசாங்கத் தாரால் 1917-இல் வெளியிடப்பட்டது. (“மத்தவிலாசம் கூத்து'' என்னும் ஒரு நூல் மலையாள மொழியில் உண்டு என்று, திரு. ஆர். நாராயணபணிக்கர் அவர்கள், தாம் எழுதியுள்ள கேரளபாஷா ஸாஹித்ய சரித்திரம் (இரண்டாம் பாகம்) என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.