book

பெண்களின் சமத்துவம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

பணியிடங்கள் பெண்களுக்கு மற்றுமோர் போர்க்களம். ஆணும் பெண்ணும் இங்கே ஒரே தராசில் அமர்ந்தாலும் கண்ணுக்குத் தெரியாத மாய வலை பெண்களின் தட்டை ஒரு போதும் ஆணுக்கு நிகராக வைக்காது. ஆணும் பெண்ணும் ஒரே தரத்திலான வேலையைச் செய்தாலும் பெண் என்பதாலேயே அவர்களின் ஊதியம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்படியே ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைத்தாலும், அது அவள் பெண் என்பதால் கிடைத்த சலுகையாகவும் இங்கே பேசப்படுகிறது. தொழிற்கல்விகள் எல்லாம் பெரும்பாலும் ஆண்களுக்கே பரிந்துரைக்கப்பட, ஆசிரியர் பணி, வங்கிப் பணி போன்றவை பெண்களுக்கான பிரத்யேகத் துறைகளாக அறிவிக்கப்படுகின்றன.உடலுழைப்பு சார்ந்த வேலைகளிலும் இதே பாகுபாட்டைப் பார்க்கலாம். விவசாயப் பணியிலும் கட்டிடப் பணியிலும் பெண் தொழிலாளர்களுக்கு எப்போதும் இறங்கு முகம்தான். ஆண் கொத்தனார் செய்கிற அனைத்து வேலைகளையும் அவர்களை மேஸ்திரிகளாக இங்கே யாரும் அங்கீகரிப்பதில்லை. ‘பெண்ணாள்’ என்ற ஒரு பதத்தை வழங்கி, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கூலியைத்தான் தருகின்றனர்