கண்ணுறங்காக் காவல் (HB)
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சிதம்பரம், ரமணன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788183456647
Add to Cartஇந்நூல் 2015-ஆம் ஆண்டின் பொருளாதார அரசியல் நிகழ்வுகளைக் கவனத்துடன் அலசுகிறது. 2015-ஆம் ஆண்டின் குழப்பங்கள், பீகார் தேர்தல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்தில் எழுந்த விவாதங்கள், சரக்கு மற்றும் சேவை வரி, மற்றும் அபாயகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது.
இந்த அரிதான கட்டுரைத் தொகுப்பில் திரு.சிதம்பரம் கடும் சர்ச்சைக்குள்ளான விஷயங்களில்கூட சற்றும் தயங்காமல் தன் கருத்தை முன்வைக்கிறார். ரிசர்வ் வங்கிக்குத் தரப்பட்டிருக்கும் கட்டளைகள், மத்திய அரசு பட்ஜெட்டின் தாக்கம், ஐக்கிய முன்னணி அரசின் வெற்றிகள், தோல்விகள், மோடி அரசின் முன் நிற்கும் வலிமை மிகுந்த சவால்கள் போன்ற விஷயங்களை அவருக்கே உரிய தனிப் பாணியில் ஆராய்கிறார்.