பெரியார் காவியம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவியரசு நா. காமராசன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788183455336
Add to Cartகம்பராமாயணத்தில்
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம்,
சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்கள் உள்ளன.
ஒட்டக்கூத்தர் எழுதியதாகச் சொல்லப்பெறும் உத்தரகாண்டத்தையும் கணக்கில்
சேர்த்தால் காப்பியத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன என்று கொள்ளலாம். இராவண
காவியத்தில் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி
காண்டம், போர்க்காண்டம் என்னும் ஐந்து காண்டங்களும் 3100 பாடல்களும் உள்ளன.
பெரியார் காவியத்தில் ஈரோட்டுக் காண்டம், பேராயக் காண்டம், சுயமரியாதைக்
காண்டம் திராவிடர் காண்டம், காமராசர் காண்டம், அண்ணா காண்டம், கலைஞர்
காண்டம் என்னும் ஏழு காண்டங்களும், 1000 பாடல்களும் உள்ளன. பெரியார்
காவியத்தில் இடம் பெற்றுள்ள 1000 பாடல்களும் காவிரியாற்றில் ஆடிமாதத்தில்
ஓடி வருகின்ற புதுப்புனல் வெள்ளம் போன்று தங்கு தடையற்ற தமிழ் நடையில்
பாடப் பெற்றுள்ளன. செய்யுட்களில் அவற்றின் ஓசை செம்மையாக அமைவதற்காகப்
பல்வேறு உத்திகளைக் கையாள்வர். இரு சொற்களை இணைத்து ஒருசீர் ஆக்குவதும்.
ஒரு சொல்லைப் பிரித்து இருசீர் ஆக்குவதும் வகையுளி என்று கூறப்பெறும். ஒரு
நூலில் வகையுளி மிகுதியாக அமைந்த பாடல்கள் இடம் பெற்றால் சிற்றறிவி
னோர்க்குப் பாடல்களின் பொருளை உணர்ந்து கொள்வதில் இடர்ப்பாடு ஏற்படும்.
பேராசிரியர் மணியன் அவர்கள் பெரும்பாலும் வகையுளியைத் தவிர்த்து
இக்காவியத்தைப் படைத்திருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும்.