book

தமிழியக்கம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :64
பதிப்பு :12
Published on :2021
Add to Cart

பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் மதுரைக்கு வந்த ஒருமுறை நகர்வுலாச் சென்றுவிட்டு பாரதி புத்தகநிலையத்திற்கு வந்தார். அக்கடையின் உரிமையாளர் சாமிநாதனிடம் தாளும் கோலும் வாங்கி, தமிழ் வளர்த்த மதுரைத் தெருக்களிலேயே தமிழ் இல்லையே எனச் சினந்து, தமிழியக்கம் என்னும் 120 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்த இந்நூலை இயற்றினார். இந்நூலின் முதற்பதிப்பு புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தில் அமைந்திருந்த செந்தமிழ் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் பாவேந்தரால் ஒரே இரவில் எழுதப்பட்டதாகும். தமிழின் தாழ்ச்சி பற்றியும் எப்படிக் கையாளுவது என்பது பற்றியும் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நூலில் கவிதைகளால் விளக்கியுள்ளார்.