book

தமிழகக் குறுநில வேந்தர்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாவித்துவான் ரா. இராகவய்யங்கார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2014
Add to Cart

92 தமிழகக் குறுநில வேந்தர் இது மண்ணியனாடு பலவற்றுள்ளும் புண்ணியநாடென்று போற்றப்படும். இத்தகைய ராஜ்யம் பண்டுதொட்டே ஒன்றுண் டென்பது, சங்கர சோழனுலா வென்னும் பழைய தமிழ் நூலில், போதகலா மாது மணக்கு மணவாளன் சேதுக்குந் தஞ்சைக்குங் கோழிக்குந் தாமப் புகாருக்கு முஞ்சைக்குமேனையுதகைக்கும்-வஞ்சிக்குங் கொற்கைக்குங் கூடற்குங் கோசலைக்குங் - காஞ்சிக்கும் விற்கைக்கு நில்லா மிதிலைக்கு-நிற்கு மரச னரசர் குலாந்தக னாரப் பிரசனபயர் பெருமான்' எனப் பல்நாடுகட்கும் முற்படவைத்துச் சேதுநாட்டை வழங்குதலாற் றெளிந்துகொள்ளலாம். இத் தமிழ் நூற் கேற்பவே ஆக்நேயபுராணாந் தர்க்கத மான புல்லாரண்யகூேடித்ரமஹாத்மியத்திற் சீராமமூர்த்தி ஆங்குத் தன் சீபாதங்களைப் பாக்கியப்பேற்றாற் றொழுது நின்ற நிஷாதத் தலைவனொருவனைத் தான் கட்டிய சேதுவைப் பரிபாலித்துவருமாறு நியமித்தருளினான் என்று கேட்கப்படுதலானு மிதனுண்மை வலியுறும். இந்நிஷாதத்தலைவனு மிவன்வழியினரும் குறுநில மன்னராய்நின்று செந்தமிழ்வளர்த்த செல்வப்பாண்டிய ரென்னும் முடியுடைப்பேரரசர்க்குப் போர்ப்படைத்தலைவ ராய் முற்காலத்தி லிருந்தனராவர். இவ்வொற்றுமையாற் பாண்டிநாட்டுள்ள சேதுவுக்கும் பாண்டியரே பேரரசராதல் பற்றி,மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன்மள்ளனார் என்னும் பழைய சங்கப்புலவர் எழுபஃதாம் அகப்பாட்டில்,