book

இந்து ஆத்மா நாம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

நாம் இந்துக்கள். நான் இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் பயன்படுத்தவே இல்லை. பழைய காலத்தில் அந்தச் சொல் சிந்து நதியின் மறுபக்கத்தில் வாழ்ந்த மக்களைக் குறிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது... தற்காலத்தில் இந்து என்னும் வார்த்தை கெட்டவைகளைப் பொருள் செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது.” இது நரேந்திரநாத் ஆக இருந்து பின் விவேகானந்தா ஆகி இன்று கொண்டாடப்பட்டு வரும் நபரின் கூற்று. 'இந்து சமயம்' எனும் நூலின்54-ஆம் பக்கத்தில் காணப்படுவது. இந்நூல் மயிலாப்பூர் இராம கிருஷ்ண மடத்தின் வெளியீடு.
அது என்னங்க, மோசமான பொருள்? அதுதான் இந்து' என்றால் 'திருடன்' என்று பாரசீக மொழியில் கூறும் பொருள் என தந்தை பெரியார் விளக்கினார். சிந்து நதிக்கு மறுபக்கத்தில் வாழ்ந்த மக்களை மட்டுமே குறிப்பிட்ட சொல் என்று விவேகானந்தா கூறுகிறார். அதாவது பாரசீக நாட்டுக்காரனுக்கு மறுபக்கம்' என்பது சிந்துநிக்குக் கிழக்கே இருக்கும் பகுதி. அதாவது இந்திய நாட்டுப்பகுதி இதே பொருள் தான் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலும்' காணப்படுகிறது.