நுண்கலைகள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2006
குறிச்சொற்கள் :கட்டடக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை
Add to Cartஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலையில் விருப்பம் இருக்கும். சிலருக்குக் கட்டடக் கலைகளை அமைத்தும் அல்லது கட்டடக் கலைகளைக் கண்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்குச் சிற்பக் கலைகளைத் தாமே அமைப்பதில் அல்லது சிற்பக் கலைகளைக் கண்டு மகிழ்வதில் நாட்டம் இருக்கும். வேறு சிலருக்கு ஓவியங்களை எழுதுவதில் நாட்டம் இருக்கும். சிலருக்கு ஒவியங்களை எழுதுவதில் அல்லது ஓவியக் கலைகளைப் பார்த்து மகிழ்வதில் கருத்து இருக்கும். மற்றுஞ் சிலருக்கு இசைக் கலைகளைப் பயில்வதில் அல்லது இசைவாணரின் இசைகளைக் கேட்பதில் ஊக்கம் இருக்கும். இன்னும் சிலருக்குக் கவிதைகளையும் காவியங்களையும் படித்தும் கேட்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்கு நாடகம் நடிப்பதில் அல்லது நடிப்பதைப் பார்ப்பதில் நாட்டம் இருக்கும். எல்லாக் கலைகளையும் கண்டும் கேட்டும் ரசிப்பவர் பலர் உள்ளனர். பொதுவாகக் கவின் கலைகள் எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் ரசித்து இன்புறும் பண்பை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தப் பொதுத் தன்மையை வளர்த்துக் கொள்வதோடு, அவரவ்க்கு விருப்பமுள்ள ஏதேனும் ஒரு நுண்கலையைச் சிறப்பாகக் கற்றுப் பயில்வது அவரவர் வாழ்க்கையில் இன்பந் தருவதாகும்.